Connect with us

இலங்கை

தேசிய அடையாள அட்டை பெறுவது தொடர்பாக ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவித்தல்

Published

on

கொவிட் 19 நோய்ப்பரவல் நிலைமை காரணமாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் வகையில் ஆட்பதிவு திணைக்களத்தின் மூலம் ஒருநாள் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த சேவைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சாதாரண சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற எதிர்பார்த்துள்ள நபர்கள் தமது விண்ணப்பங்களை கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளர் அலுவலகத்தின் தேசிய அடையாள அட்டை பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.

அதன் பின்னர் குறித்த விண்ணப்பம் திணைக்களத்திற்கு அனுப்பப்படுவதுடன், தேசிய அடையாள அட்டை அச்சிடப்பட்டு பதிவுத்தபால் மூலம் விண்ணப்பதாரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லவில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்திற்கோ அல்லது தென் மாகாண அலுவலகத்திற்கோ வருகை தர எதிர்பார்த்திருக்கும் விண்ணப்பதாரிகள் திணைக்களத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் தமது பிரதேச செயலாளர் அலுவலகத்தின் அடையாள அட்டை பிரிவுக்கு சென்றோ அல்லது கீழ்காணும் தொலைபேசி இலக்கம் ஊடாகவோ நாளொன்றையும், இலக்கமொன்றையும் முன்பதிவு செய்து கொண்டு வருவது கட்டாயமாகும்.