Connect with us

இலங்கை

நாட்டில் 18 மற்றும் 19 வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி வழங்க தீர்மானம்

Published

on

நாட்டில் 18 மற்றும் 19 வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தடுப்பூசி தொடர்பான தொழில்நுட்ப குழு தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 11ஆம் திகதி முதல் குறிப்பிட்ட வயதினருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.