Connect with us

இலங்கை

பட்டதாரி பயிலுனர்களுக்கு காரைதீவில் புதிய நியமனங்கள் வழங்கிவைப்பு !

Published

on

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடத்திற்கமைவாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை பாடசாலைகளில் பயிற்சி ஆசிரியர்களாகவும், ஏனைய திணைக்களங்களுக்கு பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் வியாழக்கிழமை (21) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் சி. ஜெகராஜனின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன், நிர்வாக உத்தியோகத்தர் டி.கமலநாதன், பிரதேச செயலாளர் பிரிவு பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வே. அரவிந்தன் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

இதன்போது காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு பயிற்சி ஆசிரியர்களாக 32 பட்டதாரி பயிலுனர்களுக்கும், பாடசாலைக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 24 பட்டதாரி பயிலுனர்களுக்கும், ஏனைய திணைக்களங்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 33 பட்டதாரி பயிலுனர்களுக்கும் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.