Connect with us

இலங்கை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்களுக்கான மருந்து தபால் மூலம்…

Published

on

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் திணைக்களத்தின் ஊடாக வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நாம் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நடைமுறையானது எதிர்வரும் 14.06.2021 திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும். எனவே பருத்தித்துறை வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்கள் அனைவரும் வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்களான 0212263261, 0212263262, 0773180357 என்பவற்றில் தொடர்பு கொண்டு தங்களின் பெயர், கிளினிக் திகதி, கிளினிக்கின் பெயர், கிளினிக் இலக்கம், வதிவிட முகவரி, தொடர்பு இலக்கம் ஆகியவற்றை தெரிவித்து தங்களுக்கான மருந்து விநியோகத்தை உறுதிப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.