Connect with us

இலங்கை

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published

on

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 8ம் திகதி எடுக்கப்பட்ட PCR முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்வாய் வடக்கு பகுதியில் ஒருவருக்கும், அல்வாய் வடமேற்கு பகுதியில் ஒருவருக்கும், புலோலி தென் மேற்கு பகுதியில் ஒருவருக்கும், புலோலி வடகிழக்கு பகுதியில் இருவருக்கும், தொண்டைமானாறு வல்வெட்டித்துறை பகுதியில் ஒருவருக்கும், வியாபாரிமூலை பகுதியில் இருவருக்கும், பருத்தித்துறை பகுதியில் ஒருவருக்கும், பருத்தித்துறை ஓடைக்கரை பகுதியில் இருவருக்கும் என 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அனைவரும் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள் என இனங் காணப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.