Connect with us

கிழக்கு செய்திகள்

பற்றைக்காட்டுக்குள் பாழடைந்த சொறிக்கல்முனை கூட்டுறவுச்சங்கம்.

Published

on

நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட சொறிக்கல்முனை பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், பற்றைகள் மண்டி பாழடைந்த நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,நாவிதன்வெளி செயலகத்திற்குட்பட்ட சொறிக்கல்முனை 01 கிராம சேவையாளர் பிரிவில், கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டு முறையாக இயங்கிய இக்கூட்டுறவுச் சங்கம் கடந்த 1990 ஆம் ஆண்டு யுத்தத்துக்கு பின்னரான காலத்திலிருந்து பாழடைந்து, புற்புதர்கள் வளர்ந்த நிலையில் சுவரில் வெடிப்புகள் ஏற்பட்டு கூரைகள் அற்று கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கட்டடத்தை சூழ பற்றைகள் காணப்படுவதனால் விஷ ஜந்துக்கள் பெருகும் இடமுமாக மாறியுள்ளது. இரவு வேளைகளில் சமூக விரோத செயற்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு நபர்கள் தூர் நடத்தைகளுக்காக குறித்த இடத்தை ஆக்கிரமிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த அரச கட்டடத்தின் அத்தியாவசிய தேவையறிந்து முறையாக புனரமைத்து பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்த ஆவன செய்யுமாறு, பிரதேச வாழ் பொது மக்கள் மற்றும் சமூக மட்ட குழுக்கள் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *