Connect with us

இலங்கை

பாரம்பரிய உணவுப் பழக்கங்களை புதிய சந்தைகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும் – அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவிப்பு

Published

on

பாரம்பரிய உணவுப் பழக்கங்களை புதிய சந்தைகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் நாவிதன்வெளி பிரதேச செயகத்தோடு இணைந்து ஏற்பாடு செய்த மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையம் ஏற்பாடு செய்த உற்பத்தி கண்காட்சி இன்று (30.03.2021) நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேலதிக அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பெண்கள் தமது சுய தொழில் முயற்சிகள் ஊடாக பிரதேசத்திலும் மாவட்டத்திலும் ஏன் எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாரியளவில் பங்களிப்புச் செய்து வருகின்றார்கள்.

உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்ற போது முதலீடுகள், இலாபம் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். சமூகத்திற்கும் அடுத்த பரம்பரைக்கும் புதிய சிந்தனைகளை கொண்டு செல்ல வேண்டும்.

முஸ்லிம்களின் பெருநாள் காலங்களாக இருந்தாலும் சரி தமிழ் சமூகங்களுடைய புதுவருடம் அல்லது ஏனைய கலாசார நிகழ்வுகளாக இருந்தாலும் சரி எமது பாரம்பரிய உணவு பழக்கங்கள் அழிந்து வருகின்றன.

பாரம்பரிய உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும். அவற்றை நாம் கடைகளில் இருந்து கொள்வனவு செய்கின்ற விடயம் ஒரு ஆரோக்கியமான விடயமல்ல. புதிய அடுத்த தலைமுறையினருக்கு இந்த பாரம்பரிய உணவு பண்டங்களை உற்பத்தி செய்கின்ற முறைகள் தொடர்பாக அறிவுறுத்தப்பட வேண்டும்.

எனவே எமது வீடுகளில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளின் போது நாம் எமது கலாசார உணவு முறைகளை உற்பத்தி செய்ய பழகிக்கொள்ள வேண்டும்.
வீட்டிலேயே ஒரு கைவினை உற்பத்தி தொழில் தெரிந்தவராக இருக்கின்றபோது அடுத்தவரை நம்பி இருக்க வேண்டிய அவசியம் எமக்கு தேவையில்லை. ஒரு நிரந்தர வருமானத்தை தரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

எனவே இவற்றை சரியாக பயன்படுத்திக்கொள்ள பிரதேச செயலகங்களில் அவற்றுக்கான முழு வளங்களும் உள்ளன. அவற்றை உரிய முறையில் உத்தியோகத்தர்களுக்கு இடையில் சிறந்த தொடர்புகளைப் பேணி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

“நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் மகளிர் தின தொனிப்பொருளுக்கு அமைய மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டதுடன் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் வழிகாட்டலின் கீழ் பிரதேச மட்டத்தில உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் எங்கு விற்பனை செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில், கிழக்குமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் என் .தனஞ்செயன், உதவிப் பிரதேச செயலாளர் என். நவநீதராஜா, கணக்காளர் கே. றிஸ்வி யஹ்சர், நிர்வாக உத்தியோகத்தர் கே. யோகேஸ்வரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜி.ஜெயகாந் உட்பட உத்தியோகத்தர்கள், பயிற்சி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *