Connect with us

இலங்கை

பாழடைந்த நிலையில் மத்தியமுகாம் பிரதான சந்தை.

Published

on

நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட மத்தியமுகாம் பிரதான சந்தை கவனிப்பாரற்று பாழடைந்த நிலையில் காணப்படுவதாக
பிரதேசவாசிகளால் சுட்டிக்காட்டப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மூவின மக்களும் செறிந்து வாழும் மத்தியமுகாம் 02 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள இச்சந்தை, புற்புதர்கள் சூழ்ந்து பற்றைகள் அடர்ந்து மண்டிய நிலையில், கால்நடைகளினதும் விஷ ஜந்துக்களினதும் உறைவிடமாக மாறியுள்ளதென பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இச் சந்தையின் சுற்றுப்புறச்சூழல், கால்நடைகளின் எச்சங்கள் நிறைந்து டெங்கு நுளம்பு பெருகும் அபாய இடமுமாக மாறியுள்ளதனால் சந்தைக் கட்டிடத்திற்கு அருகிலுள்ள
பொதுமக்கள், நுளம்புக்கடி, விஷ ஜந்து தீண்டுதல் உட்பட நாளாந்தம் பல்வேறு அசெளகரியங்களுக்கும் உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக செயற்பாடற்று பராமரிப்பின்றி பற்றைகளால் காடு மண்டிக் காணப்படும் சந்தையின் சுற்றுப்புறச் சூழல் இவ்வாறு இருந்தும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்கள் அசமந்தப்போக்குடனே செயற்படுவதாக, பிரதேச வாழ் பொதுமக்கள் கவலையுடன் அங்கலாய்க்கின்றனர்.

பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள குறித்த சந்தைக் கட்டிடத்தினை முறையாக துப்பரவு செய்து வியாபாரிகளினதும் பொதுமக்களதும் தேவையறிந்து இயங்க வைக்குமாறு, பிரதேச வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பா.மோகனதாஸ்-