Connect with us

இலங்கை

பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலை விற்பனை செய்த தொழிற்சாலை விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு

Published

on

கழிவு செய்யப்பட்ட தேயிலை தூளை முறைகேடாக விற்பனை செய்வதாக கல்முனை விசேட அதிரடிப்படை க்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சுமார் 18 ஆயிரம் கிலோ பாவனைக்குதவாத தேயிலைத் தூள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கழிவு தேயிலை தூள்களை  பொதுமக்களின் பாவனைக்காக பொதி செய்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு சென்ற கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரத்நாயக்க தலைமையில் பொலிஸ் பரிசோதகர்களான பிரேமரத்ன,  நிசங்க மற்றும் பண்டார உள்ளிட்ட குழுவினர் தொழிற்சாலையை (17) மாலை சுற்றி வளைத்தனர்.

இதன் போது பின்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றும் முறைகேடாக பொதி செய்யப்பட்ட கழிவு தேயிலை தூள்கள், காலாவதியான தூள்கள் என சுமார் 18 ஆயிரம் கிலோ பாவனைக்குதவாத தேயிலை தூள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன