Connect with us

இலங்கை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவு, ஆற்றல், ஆளுமை மிக்க பக்குவமான பெருந்தலைவர்

Published

on

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவு, ஆற்றல், ஆளுமை மிக்க  பக்குவமான பெருந்தலைவர் என்று அரசியல் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா தெரிவித்தார்

சம கால அரசியல் நடப்புகள் தொடர்பாக  இன்று (13) சனிக்கிழமை ஊடகவியலாளர்களை காரைதீவில் சந்தித்து பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
பிரதமர் மஹிந்த சொல்வதை செய்பவர், செய்வதை சொல்பவர். முஸ்லிம் ஜனாஸாக்கள் இனி மேல் எரிக்கப்பட மாட்டாது என்று பொறுப்பு வாய்ந்த பிரதமர் என்கிற வகையில் கடந்த நாட்களில் பாராளுமன்றத்தில் வைத்து பகிரங்க உறுதிமொழி தந்திருக்கின்றார்.

அவருடைய உறுதி மொழியை மதித்து நாம் நல்லது நடக்கும் என்று காத்திருக்கின்றோம். ஆயினும் அரசாங்க அமைச்சர்கள் சிலரின் கருத்துகள் சங்கடத்தை உருவாக்குவனவாக மாத்திரம் அன்றி பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை கோமாளியாக்க முயல்வதாக உள்ளன. 

இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்ணாண்டோ பிள்ளை இன்னமும் பக்குவப்பட வேண்டி உள்ளது என்பதையே அவரின் கருத்துகள் பிரதிபலித்து நிற்கின்றன. அவரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை விடவும் மேலோங்கியவராக ஊடகங்களுக்கு காட்ட முயல்கிறாரா? என்கிற சந்தேகமும் ஏற்படுகின்றது. 

உலக சுகாதார ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கின்ற நிபுணர்களை விட இலங்கையின் நிபுணர் குழுவினர் ஒன்றும் எவ்வகையிலும் துறை சார்ந்து மேம்பட்டவர்கள் அல்ல என்பது வெளிப்படையான உண்மை ஆகும். உலக சுகாதார ஸ்தாபனம் உடலங்களை புதைப்பதால் எந்தவிதமான தீங்கும் நேர்ந்து விட போவதில்லை என்று பிரகடனப்படுத்தி உள்ளது.

இதே போல அமைச்சர் விமல் வீரசிங்கவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தொடர்பான கருத்துகளும் ஆரோக்கியமானவையாக இல்லை. அவர் வார்த்தைகளை அளந்து பயன்படுத்த வேண்டியவராக உள்ளார் என்று மக்கள் மிக நீண்ட காலமாகவே பேசி வருகின்றனர்.

எவை எப்படி இருந்தாலும் முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி, அங்கீகாரம் ஆகியன இயலுமான விரைவில் அரச வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு இடம்பெறுகின்ற பட்சத்திலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினுடைய உறுதிமொழியின் உண்மை தன்மையை எமது மக்கள் நம்புவார்கள். இதற்கான முன்னெடுப்புகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *