Connect with us

இலங்கை

புதிய வகை கொரோனா தொற்றாளர்கள் நாட்டின் 4 பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Published

on

இலங்கையில் பரவலாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் 4 பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டிருக்கும் புதிய வகை கொரோனா தொற்று தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த தொற்று, கொழும்பு, அவிசாவளை, இங்கிரிய, பியகம, வத்தளை, மத்துகம, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.