Connect with us

இலங்கை

பெரும் கஷ்டத்தில் இருந்த மீனவருக்கு 15 இலட்சம் பெறுமதியான மீன்கள்!

Published

on

திருகோணமலை – கொட்பே கடற்கரை பிரதேசத்தில் கரைவலையில் 3000 கிலோகிராமிற்கும் அதிக பாறை மீன்கள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை கொட்பே கடற்கரை பிரதேசத்தில் ஜெயா பேபி என்பவரின் கரைவலையிலேயே இவ்வாறு அதிகளவான மீன்கள் சிக்கியுள்ளன.

நாட்டில் ஏட்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவித்துள்ள நிலையில் பெரும் கஷ்டத்தில் இருந்த மீனவர்களுக்கே இந்த அதிஷ்டம் கிட்டியுள்ளது.

இவ்வாறு பிடிபட்ட பாறை மீன்களின் பெறுமதி சுமார் ரூபா 15 இலட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *