Connect with us

சர்வதேசம்

போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்

Published

on

போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதற்கான விளைவுகளை மியான்மர் சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறும்போது, “மியான்மரில் அமைதியாகப் போராடுபவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுத்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *