Connect with us

இலங்கை

மரக்கன்றுகள் விநியோகம்

Published

on

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் –  உயிர் வளம் காப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் சௌபாக்கியா வீட்டுத்தோட்டம் என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட மத்திய முகாம்,மூன்று மத்திய முகாம் நான்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் கீழ் உள்ள 300 வீட்டுத் தோட்ட பயணாளிகளுக்கான மரக் கன்றுகள் வினியோகிக்கும் நிகழ்வு (15)  மத்திய முகாம் பல்தேவைக்கட்டிடத்தில் நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மத்திய முகாம் கிராம உத்தியோகத்தர் கே. மதன் அவர்களின் தலைமையில் மூவின மக்களும் பயனடையும் வண்ணம் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.தயாளராஜ், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.நிர்மலா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்  டி.ஜனார்த்தனி மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.