Connect with us

இலங்கை

மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி

Published

on

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிவகைகளின் மொத்த விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இன்று 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்பொழுது யாழ்ப்பாணத்தில் அறுவடை செய்யப்படும் மரக்கறி வகைகள் பெருமளவில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருவதை அடுத்தே இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் கடந்த வாரத்தில் முக்கிய மரக்கறி வகைகள் சிலவற்றின் மொத்த விலை ஒரு கிலோ கிராம் ரூபாய் 200 க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் போஞ்சி ஒரு கிலோவின் விலை ரூபாய். 230 க்கும் ரூபாய். 280 க்கும் இடைப்பட்ட உயர்மட்டத்தில் இருந்ததுடன், இன்றைய தினங்களில் போஞ்சி ஒரு கிலோகிராம் ரூபா.100 வரை வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போஞ்சியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் அனைத்து மரக்கறிகளையும் கொள்வனவு செய்யும் மொத்த விலை வீழ்ச்சியடைவதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.