Connect with us

இலங்கை செய்திகள்

மருதனார்மடம் சந்தை வியாபாரி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என இருவேறு தொழில்களில் ஈடுபடும் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது

Published

on

மருதனார்மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 394 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் நேற்று  சனிக்கிழமை காலை  பொற்றுக்கொள்ளப்பட்டுள்ளது  என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மருதனார்மடம் சந்தை வியாபாரி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என இருவேறு தொழில்களில் ஈடுபடும் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38 வயதுடைய குடும்பத்தலைவருக்கே கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய கடந்த புதன்கிழமை எழுமாறாக மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி சாரதிகளிடம் மாதிரிகள் பெறப்பட்டன. அவjர்களில் ஒருவருக்கே கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டது.
இந்த நிலையில் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் அனைவரிடமும் நேற்று சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.அத்துடன், முச்சக்கர வண்டிச் சாரதிக்கு கோரோனா வைரஸ் தொற்று எவ்வாறு என்பது தொடர்பில் சுகாதாரத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர் என தெரிவித்தார்
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *