Connect with us

இலங்கை செய்திகள்

மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் உற்பத்தி கண்காட்சி

Published

on

கிழக்கு மாகான கிராம அபிவிருத்தி திணைக்களம்  நாவிதன்வெளி பிரதேச செயலகத்தோடு இணைந்து நடத்துகின்ற மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் உற்பத்தி கண்காட்சி எதிர்வரும் திங்கட்கிழமை (29)பிரதேச செயலக கலாசார மத்திய நிலைய வளாகத்தில்  பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.

‘நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் மகளிர் தின தொனிப்பொருளுக்கு அமைய மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்கள்  காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன் விற்பனையும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சி கூடங்களை திறந்து வைக்க வுள்ளார்.  கிழக்குமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் என் .தனஞ்செயன் கௌரவ அதிதியாக  கலந்து கொள்ளவுள்ளார்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் என். நவநீத ராஜா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். லதாகரன், கணக்காளர் கே. றிஸ்வி யஹ்சர், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரி.ஏ.நாஹிப் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரதேசத்தின் கீழுள்ள பெண்களின் ஆக்கத்திறன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதுடன் பெண்கள் தமது உற்பத்திக்கு ஏற்ப வருமானத்தை ஈட்டக்கூடிய வகையிலும் பிரதேசத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் நோக்கத்தோடும் இந்த உற்பத்தி மற்றும் வியாபார கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *