Connect with us

இலங்கை

மாதிரி பரீட்சைகள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன.

Published

on

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சைகள் தற்போது பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன.

கொரோனா தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீள திறக்கப்பட்டு தற்போது கல்வி நடவடிக்கைகள்  சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் சுகாதார சட்ட விதிமுறைகளுக்கு அமைய பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன.

பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாகாண மட்ட மாதிரி பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றன. பாடசாலையின் அதிபர் எம்.எம். முஹம்மட் நியாஸ் தலைமையில் பாடசாலையின் சுற்றுப்புறச் சூழல்கள் சுத்தப்படுத்தப்பட்டு சுகாதார சட்ட விதிமுறைகளுக்கு அமைய இந்தப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.