Connect with us

சர்வதேசம்

மியன்மார் இராணுவ ஆட்சியாளா்களை தங்களுடைய சுயநலத்துக்காக சீனாவும் ரஷ்யாவும் ஆதரித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு!

Published

on

மியன்மார் இராணுவ ஆட்சியாளா்களை தங்களுடைய சுயநலத்துக்காக சீனாவும் ரஷ்யாவும் ஆதரித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

மியன்மார் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையின் மூலம் கடுமையான தடைகளை விதிக்கும் முயற்சிக்கு சீனாவும் ரஷ்யாவும் முட்டுக்கட்டை போடுவதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இதுதொடா்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவுத் தலைவா் ஜோசப் போரில் தனது வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், மியன்மாரில் இராணுவ ஆட்சியாளா்களின் அடக்குமுறையால் நாட்டு மக்கள் ரத்தம் சிந்தி வருவது உலகையே அதிா்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது என தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிராக உலக நாடுகள் இணைந்து நடவடிக்கை எடுக்கலாம் என்றால், சில முக்கிய நாடுகள் அதற்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் முக்கியமாக, ஐ.நா. பாதுகாப்பு சபையின் மூலம் மியன்மார் மீது நடவடிக்கை எடுக்க சீனாவும் ரஷ்யாவும் தடையாக உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் சாலைவழி மற்றும் கடல்வழி வா்த்தகப் பாதையில் மியன்மார் முக்கியப் பங்கு வகித்து வருகிறது என்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மியன்மாருக்கு அதிக அளவில் ஆயுதம் விற்பனை செய்யும் நாடாக ரஷ்யா உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர ஜப்பான்,தென்கொரியா, சிங்கப்பூா், இந்தியா என பல நாடுகள் மியன்மார் சாா்ந்து பல பொருளாதாரப் பயன்களை அடைந்து வருகின்றன என்பதால், அந்நாட்டு இராணுவ அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதை இந்த நாடுகள் விரும்பவில்லை என்று கூறியுள்ளாா்.

மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியன்மார் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு எதிராக மியான்மா் இராணுவம் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது.

இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடா் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 600 இற்கம் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, மியன்மார் இராணுவ ஆட்சியாளா்கள் மீது அமெரிக்கா சில பொருளாதாரத் தடைகளை விதித்தது.

மேலும் மியன்மார் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

எனினும் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மியன்மாருக்கு ஆதரவாக உள்ளதால், ஐ.நா. பாதுகாப்பு சபையின் மூலம் அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *