Connect with us

இலங்கை

மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணம்!

Published

on

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 579ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேலும் 98 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 93 ஆயிரத்து 226ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை 90 ஆயிரத்து 21 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில் இன்னும் இரண்டாயிரத்து 630 பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.