Connect with us

கிழக்கு செய்திகள்

யானைத் தாக்குதலுக்குள்ளான குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கி வைப்பு.

Published

on

மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட வேத்துச்சேனைக் கிராமத்தில் காட்டுயானைத் தாக்குதலுக்குள்ளாகி பகுதியளவில் சேதமடைந்த நான்கு குடும்பங்களுக்கான நிவாரணத் தொகை அண்மையில்(11) வழங்கி வைக்கப்பட்டது.
கிராம சேவை உத்தியோகத்தர் ப.இம்சன் தலைமையிலான இந்நிகழ்வில் போதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி, உதவிப் பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன், போரதீவுப் பற்று வனப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ப.ஜெசாந், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கேசவப்போடி உள்ளிட்ட செயலக அதிகாரிகள் கலந்துகொண்டு நிதித் தொகையினை உரிய பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

கடந்த 2020.05.09 ஆம் திகதி நள்ளிரவு வேளையில் வேத்துச்சேனைக் கிராமத்திற்குள் கூட்டமாக புகுந்த காட்டு யானைகள் அக்கிராமத்திலிருந்த தோட்டங்கள் உட்பட பயன்தரும் மரங்களை அழித்திருந்ததோடு 04 வீடுகளையும், உடைத்து சேதப்படுத்தியிருந்தது. இவ்வாறு பாதிக்கப்பட்ட 4 குடும்பங்கங்களுக்கு 247000 ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இதில் மிகவும் பலத்த பாதிப்புக்குள்ளான குடும்பத்திற்கு ஆகக் கூடிய தொகையாக 94975 ரூபா வழங்கி வைக்கப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *