Connect with us

இலங்கை

வடமராட்சி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அடாவடி-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Published

on

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள் முகங்களை மூடிகட்டியவாறு பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கடற் தொழில் சமாசத்திடமும் முறையிட்டுள்ளார் பாதிக்கப்பட்ட மீனவர்

புதன் கிழமை  அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்  பாதிக்கப்பட்ட மீனவர்  தெரிவிக்கையில்,

பருத்தித்துறை சுப்பர்மடம் இறங்குதுறையிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் தொழிலுக்காக நேற்று  அதிகாலை படகில் சென்றேன்.

அங்கு இந்திய மீனவர்களின் 4 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்ததுடன், எனது 20 வலைகளை அவர்கள் அறுத்து எடுத்திருந்தனர்.

வலைகளைத் தருமாறு கேட்டேன். இந்திய மீனவர்கள் கற்களால் எனது படகை நோக்கி எறிந்தனர். தமக்கு அருகே வந்தால் தாக்குதல் நடத்துவோம் என்று இந்திய மீனவர்கள் மிரட்டினார்கள்.அவர்கள் முகத்தை தெரியாதவாறு துணி கட்டியிருந்ததுடன், கொட்டன்களை வைத்திருந்தனர்.

பல மணிநேரம் வலைகளைக் கேட்டு காத்திருந்துவிட்டு, ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளேன்.

சுமார் 3 லட்சம் ரூபாய் வலைகளை இழந்துள்ளேன்” என்று  தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மீனவர், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் கடற் தொழில் சமாசத்திடமும் முறையிட்டுள்ளார்.