Connect with us

இலங்கை

வறிய மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவி

Published

on

சுவிஸ்லாந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட வாகனேரி கிராமத்தில் இயற்கை அனர்த்தம், கொரோனா போன்ற காரணங்களினால் தமது வாழ்வாதாரத்தினை இழந்த வறிய  குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர்பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரனினால் வாகனேரிகிராமத்தில் இயற்கை அனர்த்தம், கொரோனா போன்ற காரணங்களினால் தமது வாழ்வாதாரத்தினை இழந்த வறிய  குடும்பங்களுக்கும், வறிய மாணவர்கள் சிலருக்கும்உதவிகள் வழங்கும் வகையில் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் நிதி உதவி வழங்கப்பட்டது. 

அந்த வகையில் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக ஒருவருக்கு தலா 1200 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள்வழங்கப்பட்டதுடன், வறிய மாணவர்கள் சிலருக்கு பாடசாலை உபகரணங்களும் மட்டக்களப்புமாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரனால் வழங்கப்பட்டது.

 குறித்த நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேசசபை உறுப்பினர்  த.கிருபைராசா, கிராம குளத்துமடு அபிவிருத்திச் சங்க தலைவர்இ.பார்த்தீபன், வாகனேரி அபிவிருத்திச் சங்க தலைவர் க.காசிநாதன் மற்றும் பேரவைப்பிரதிநிதிகளான சி.தயாபரன் பி.புஸ்பராஜா போன்றோர் கலந்து கொண்டனர்.