Connect with us

இலங்கை

வறிய முஸ்லிம் பிள்ளைகளுக்கு புத்தக பைகள்

Published

on

மட்டக்களப்பை தளமாக கொண்டு இயங்குகின்ற மதிக்குமார் பௌண்டேசன் சமூக சேவைகள் அமைப்பின் நிதி பங்களிப்பில்  தமிழ் – முஸ்லிம் நல்லுறவின் அடையாளமாக அம்பாறை மாவட்டத்தில் வொலிவேரியன் மீள்குடியேற்ற கிராமத்தை சேர்ந்த வறிய மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 55 பேருக்கு புத்தக பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

வொலிவேரியன் மீள்குடியேற்ற கிராமத்தை தளமாக கொண்டு இயங்குகின்ற பாத்திமா மகளிர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று இக்கிராமத்தில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமையும், நேற்று திங்கட்கிழமையும் இடம்பெற்ற நிகழ்வுகளில் வைத்து மதிக்குமார் பௌண்டேசனின் ஸ்தாபகர் மதிக்குமாரின் பங்கேற்புடன் இவை பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

இவற்றில் மதிக்குமார் பவுண்டேசன் அமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பாத்திமா மகளிர் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். அன்ஸார் உள்ளிட்டோர் பேராளர்களாக கலந்து கொண்டு புத்தக பைகளை வழங்கி வைத்தனர்.