Connect with us

இலங்கை செய்திகள்

மாளிகைக்காட்டில் தடை போட்டு கட்டப்பட்டிருந்த கயிறுகள் அவிழ்க்கப்பட்டது

Published

on

மக்களின் விமர்சனத்தையடுத்து மாளிகைக்காட்டில் பிரதேச சபையினால் போடப்பட்ட தடையை பிரதேச செயலகம் அகற்றியது

அம்பாறை மாவட்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியலய நிர்வாகத்தின் கீழுள்ள மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் கொரோனா தொற்றாளர் என திங்கட்கிழமை அடையாளப்படுத்தப்பட்டனர். அதனையடுத்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியலய சுகாதார ஊழியர்களினால் பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

மட்டுமின்றி மாளிகைக்காடு மத்தி- கிழக்கு மற்றும் சாய்ந்தமருது மாளிகைக்காடு எல்லைகளை இணைக்கும் உள்ளகப்பாதைகள் கயிற்றினால் மறிக்கப்பட்டு திங்கட்கிழமை மாலை போக்குவரத்து தடைபோடப்பட்டிருந்தது. அதனால் எழுந்த பொதுமக்களின் விமர்சனங்களை அடுத்து காரைதீவு பிரதேச செயலக அப்பிரதேசத்துக்கு பொறுப்பான அதிகாரியினால் அந்த கயிறுகள் அவிழ்க்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பில் வினவிய போது சாய்ந்தமருது- மாளிகைக்காடு மக்கள் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள். அவர்களை குறித்த எல்லைக்குள் கட்டுப்படுத்துவது கஷ்டமான ஒரு செயலாகும்.  வீதித் தடையைப் போட்டு சனநெரிசலை வெகுவாக குறைத்து மக்களூடாக கொரோனா பரவுதலை தடுக்கும் நோக்கில்தான் இத்தடையை மேற்கொண்டிருந்தனர். இருந்தாலும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து எடுக்கும் தீர்மானங்களையே இங்கு இலகுவாக அமுல்படுத்த முடியும். இருந்தாலும் சமூக பரவலை தடுத்து கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுதலை பெற சுகாதார வழிமுறைகளை பேணி நடப்பதுடன் வீணான பயணங்களை தவிர்த்து வீடுகள் தங்கி இருப்பதே சிறந்தது என காரைதீவு பிரதேச செயலக அவ் அதிகாரி தெரிவித்தார்.

இருந்த போதிலும் இரண்டாம் நாளான நேற்றும் (15) காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்தினால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *