Connect with us

இலங்கை

வழமையான தேசிய கொடி இம்முறையும்…

Published

on

வழமை போன்று இம்முறையும் முன்னர் பயன்படுத்தப்பட்ட தேசிய கொடியை சுதந்திர தினத்திற்காக பயன்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற கமல் குணரட்ன தெரிவித்தார்.

கடந்த காலம் முதல் தேசிய கொடி தொடர்பில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த குறைபாடுகள் இம்முறை நீக்கப்பட்டுள்ளதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் எழுப்பிய கேள்விக்கு செயலாளர் பதிலளிக்கையில், தற்பொழுது நாம் தேசிய கொடி ஒன்றை பயன்படுத்துகின்றோம். சமுகத்தில் பல்வேறு தரப்பினர் இதில் உள்ள குறைபாடுகள் குறித்து சுட்டிக்காட்டினர்.

தேசிய கொடியில் சிங்கத்தின் உருவத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தி வடிவமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர். இவர்கள் அனைவரினதும் ஆலோசனைகளை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். இதுதொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

இதுதொடர்பில், பாரிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இறுதி நடவடிக்கையாக இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இதனால் இம்முறை தேசிய சுதந்திர தின வைபவத்தை நடத்தும் பொழுது இதிலும் பார்க்க மேலதிகமாக ஏதும் செய்வதற்கு இல்லை. இதனால் நாம் முன்னர் பயன்படுத்திய தேசிய கொடியை நாம் பயன்படுத்துவோம்.

தேசிய கொடியில் எந்த மாற்றமும் இல்லை. சிங்கத்தின் உருவத்தில் உள்ள குறைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். இதனை வடிவமைப்பாளர்களுடனும், அரசாங்க அதிகாரிகளுடனும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று செயலாளர் மேலும் தெரிவித்தார்.

தேசிய கீதம் தொடர்பாக மற்றுமொரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு செயலாளர் பதிலளிக்கையில், தேசிய கீதம் இசைக்கப்படுவது ஜனாதிபதி சுதந்திர தின வைபத்தில் கலந்துக்கொள்ளும் வேளையில் தேசிய கொடியை ஏற்றும் பொழுது தேசிய கீதம் இசைக்கப்படும். சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இடம்பெறும் என்றும் செயலாளர் தெரிவித்தார்