Connect with us

இலங்கை

வாகனங்களின் இலக்கத்தகடுகளை அகற்றி வேறு நபர்களுக்கு விற்பனை!!

Published

on

நேற்றைய தினம் (07) மிரிஹான விசேட விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போலியான ஆவணங்களை தயாரித்த நபரொருவர் கடுவலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் வாகனங்களின் இலக்கத்தகடுகளை அகற்றி வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் குறித்த நபர் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்