Connect with us

இலங்கை

வாகன நெரிசலுக்கு மாற்று தீர்வு-அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Published

on

கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் நிலவும் வாகன நெரிசலுக்கு மாற்று தீர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வாகன நெருக்கடி அதிகமுள்ள இடங்களில் மேம்பாலங்கள், சுரங்க வழி பாதசாரி கடவை, மேம்பால பாதசாரி கடவை, உட்பாதை என்பன அமைக்கப்படும்.

கொஹூவல பிரதேசத்தில் ஒரு மேம்பாலமும், அதேபோல பாலதக்ஷ மாவத்தை, உத்துரானந்த மாவத்தை, நீதிபதி அக்பர் மாவத்தை ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குருநாகல் முத்தெட்டுகல, யாங்கல் மோதர, அலவ்வ மற்றும் மாகோ நகரங்களிலும், கண்டி, கெட்டம்பே பிரதேசத்தில் ஒரு மேம்பாலமும் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.