Connect with us

சினிமா

விஜய்யின் 66 வது படம்….

Published

on

விஜய்யின் 66 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார்.

மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது விஜய் நடிக்கும் 65 வது படம்.

இந்நிலையில் விஜய்யின் 66 வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் உருவான தோழா படத்தை இயக்கியவர் பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி. விஜய்யின் 66 வது படத்தை வம்சி இயக்கவுள்ளார். இது பற்றி, தெலுங்கு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் உறுதி செய்துள்ளார். கரோனா ஊரடங்குக்குப் பிறகு இதுபற்றிய செய்தி அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய் – வம்சி இணையும் படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். விஜய் 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது.

2007 இல் முன்னா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வம்சி இதுவரை தோழா உள்பட ஐந்து படங்களை இயக்கியுள்ளார். 2019 இல் மகேஷ் பாபு நடிப்பில் வம்சி இயக்கிய மஹர்ஷி, சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *