Connect with us

இலங்கை

விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை-கல்வி அமைச்சு

Published

on

ஏராளமான மாணவர்களை அணிதிரட்டாமல் மாணவர்களின் மனப்பான்மை மற்றும் திறன்களை வளர்ப்பதற்கு சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை மேம்பாட்டுக்கான உத்தியோகபூர்வ அரச விழாக்கள் மற்றும் சுகாதார விதிமுறைகளின்படி ஏற்பாடு செய்யக்கூடிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படலாம் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பேச்சுப் போட்டிகள், விவாதப் போட்டிகள் போன்ற போட்டிகளும் மற்றும் மரம் நடும் திட்டங்களும் பாடசாலையில் நடத்தப்படலாம்.

இருப்பினும், பாடசாலை வளாகத்திற்கு வெளியே பெரிய அளவிலான கூட்டங்கள், ஊர்வலங்கள், அணிவகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவை அனுமதிக்கப்படாது.

வெளி நபர்கள் சம்பந்தப்பட்ட சுகாதார நடவடிக்கைகளில் மாணவர்கள் பங்கேற்கவும் தடை விதிக்கபட்டுள்ளது , என்றுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *