Connect with us

இலங்கை

வெளிநாட்டு பயணத்திற்கு செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் விசேட வழிகாட்டிகள்

Published

on

குறுகிய கால வெளிநாட்டு பயணத்திற்கு செல்லும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் வர்த்தகர்கள் தொடர்பில் விசேட வழிகாட்டிகள் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக உயிரியல் குமிழிக்கு (Bio – Bubble) உட்பட்டதாக குறுகிய கால வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக நாட்டில் இருந்து செல்வோர் மீண்டும் இலங்கைக்கு வருகை தந்த பின்னர் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தல் மற்றும் குறிப்பிட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கையின் படி விடுவிக்கப்படுவதற்கு இந்த புதிய வழிகாட்டிகள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சுற்றுப்பயணங்களில் ஈடுப்படுவோர் அதுதொடர்பாக முன்கூட்டியே தொற்றுநோயியல் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்