Connect with us

இலங்கை

வேலை என்பது சேவைக்கான நேரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

Published

on

இந்த நாள் ஒரு பொன்னான அறுவடை தரக்கூடிய நாளாக அமைந்ததையிட்டு முதலில் இறைவனுக்கு நன்றி செல்ல வேண்டுமென்றும் அதற்கு அடுத்ததாக இந்த நாட்டின் அரசாங்கத்திற்கும் நீங்கள் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும் முதலில் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன் என கல்முனை பிரதேச செயலக கணக்காளர், வை.ஹபீபுல்லாஹ் குறிப்பிட்டார்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான இரண்டாம் கட்ட வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கு அமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 25 பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் நியமனம் கடிதம் வழங்கும் நிகழ்வை தலைமை தாங்கி நாடாத்தி உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றுகையில்,

இதற்கு முன்னர் இந்த பிரதேச செயலகத்திற்கு நீங்கள் பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக வந்திருந்தாலும் கூட இன்றைய நாளும் அதற்கு முந்திய நாட்களையும் வித்தியாசமான நாட்களாகவே நீங்கள் பார்ப்பீர்கள்.

இதற்கு முன்னர் நீங்கள் இங்கு வந்ததெல்லாம் உங்கள் சேவையை நாடி வந்திருப்பீர்கள். இன்றைய தினத்திலிருந்து உங்களை நாடி மக்கள் வர இருக்கிறார்கள். எனவே  இன்றைய நாள் உங்களுக்கு ஒரு வித்தியாசமான நாளாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஏதாவது ஒரு விடயத்துக்கு உள்நுழையும் போது அதீத அக்கறையும், அதீத முயற்சியையும் நாங்கள் எடுப்பது வழக்கம்.

ஏன் இதனை நான் சொல்கின்றேன் என்றால் அரசாங்க உத்தியோகத்தில் நுழைகின்ற போது நாங்கள் உற்சாகமாக நின்று மக்களுக்கு சேவை ஆற்றும் விடயத்தில் அதீத அக்கறையும், அதீத பிரயத்தனமும் எடுத்து வேளைக்கு வேலைக்கு வருவதும் பின்னர் அதில் உற்சாகம் இழந்து போய் விடுவதுடன் மீண்டும் வேலைக்கு வருவதற்கு மனம் வருவதில்லை. காரணம் மீண்டும் அங்கு என்ன வேலை  இருக்கின்றது என்ற உணர்வு உங்களுக்கு வருகிறது.

முதலில் நீங்கள் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது “வேலை என்பது சேவைக்கான நேரம்” என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு வேலை இருக்கிறதா? இல்லையா? என்பதை விட நாங்கள் அலுவலகத்தில் எந்த நேரமும் தரித்திருக்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களது செயலாற்று மதிப்பீட்டு அறிக்கையில் உங்களைப் பற்றிய பல கேள்விகள் இருக்கும் அதில் முக்கியமாக பார்த்தால் இவர் வேளைக்கு அலுவலகத்திற்கு வேலைக்கு வருபவரா? அலுவலத்தில் தொடர்ச்சியாக தரித்திருப்பவரா? ஏனைய சக உத்தியோகத்தர்கள் மற்றும் நண்பர்களுடன் சகஜமாகப் பழகுபவரா? இதன் மூலம் உங்களது வேலை என்பதற்கு மேலதிகமாக சமூகமயமாதல் என்ற விடயம் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அரச உத்தியோகத்துக்காக நீங்கள் பல்வேறு சூழலில் இருந்து இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களிடம் பல ஆளுமைகள் இருந்தாலும் அதேபோன்று ஆளுமைகள் இல்லாமல் இருந்தாலும் பட்டப்படிப்புக்கு மேலாக பல பட்டங்கள் முடித்தவர்கள் இங்கு இருக்கலாம். ஆனால் அலுவலகத்திற்கு ஏற்றால் போல் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அலுவலக கட்டமைப்பில் நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்பதை முதலில் அறிந்து கொள்ளவும் வேண்டும்.

அலுவலகத்தில் தரித்திருந்து பிற மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போது உங்களுக்கு எழுகின்றதோ அப்போது நமக்குள் ஒரு உந்து சக்தி ஏற்படும். இங்கு தரித்திருந்து வேலை செய்யும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் போன்று எதிர்காலத்தில் நீங்களும் வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உருவாகும்.

எங்களுடைய வாழ்க்கையில் உயர்வு கிடைக்க வேண்டும் என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். எங்களை இயந்திர வாழ்க்கைக்கு அடிமையாக்காமல் அல்லது  பழக்கப்படுத்திக் கொள்வது மிகவும் கஷ்டத்தைத் தரும். இதய சுத்தியுடன் வேலை செய்தால் மற்றவர்களை போல் உயர முடியும். பட்டமரமாக இருக்காமல் அதை வளர்க்க உங்களுக்கு நீங்களே நீர் ஊற்ற வேண்டும்.

கிடைக்கின்ற மணிக்கு மேலாக செயலாற்ற வேண்டும். கடந்த காலங்களில் கிராம உத்தியோகத்தர் ஆற்றிய பணிகள் இன்று பல பிரிவுகளாக, துறைகளாக பிரித்து பல அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் எமது வேலை மிகவும் சொற்பமே. எமது வேலை முடிந்ததும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேட்டுக்குடிச் சிந்தனை அதாவது (நாங்கள் தான் எல்லாம் என்ற மனநிலை)யில் இருந்து நாங்கள் விலகி மற்றவர்களுடன் சரியான முறையில் நடந்து கொள்வதுடன் ஒரு நிறுவனத்துக்கு தொழிலுக்கு வந்தால் நாங்கள் நிறுவன கட்டமைப்பு முற்றிலும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று கூறி முடித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *