Connect with us

இலங்கை

ஹரீஸ், பைசாலுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வெளியாகின!

Published

on

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசால் காசிம் ஆகியோருக்கு கோவிட் 19 பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசால் காசிம் உட்பட அவர்களின் உத்தியோகத்தர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதாக பெறுபேறுகள் கிடைத்தன.

இருப்பினும் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி இருப்பதாக தங்களின் சமூக வலைத்தளங்களினுடாக அவர்கள் உறுதிப்படுத்தியதுடன்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட கோவிட் 19  பாதிப்புக்குள்ளான ஏனைய சக பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என சகலரும் விரைவில் குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.