Connect with us

கிழக்கு செய்திகள்

Published

on

மட்டு. களுவாஞ்சிக்குடி -பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலகங்களை இணைக்கும் குருக்கள்மடம் – அம்பிளாந்துறை ஆகிய கிராமங்களுக்கிடையே பாலத்தை அமைத்துத் தருமாறு பிரதேசவாசிகளால் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு வாவியின் களப்பு பகுதியினை ஊடறுத்துச் செல்லும் குருக்கள்மடம் – அம்பிளாந்துறை கிராமங்களுக்கிடையே பாலம் அமைக்கப்படாமையினால்பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாவதாகவிசனம் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இயந்திரப்படகு பாதையின் ஊடாக குறுகிய ஒரு கிலோ மீற்றர் தூரத்தை, இங்குள்ளவர்கள் 12 கிலோ மீற்றர் சுற்றிச் சென்றே அடைய வேண்டியுள்ளதனால் வவுணதீவு, பட்டிப்பளை, ஆரையம்பதி மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேச செயலகங்கள், பாடசாலைகள் உட்பட அரச அலுவலகங்களுக்குச் செல்வோர் குறித்த நேரத்திற்கு கடமைகளுக்கு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக சேவையில் ஈடுபட்டுவரும் இயந்திரப் படகின் அடிப்பகுதியில் வெடிப்புகளும், குழி போன்ற இத்துப்போன நிலையும் காணப்படுவதனால் நீர் உட்புகுவதாகவும் அடிக்கடி பழுதடைவதாகவும், இதனாலேயே இயந்திர படகு மார்க்கம் தடைப்படுவதாகவும் தெரியவருகிறது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த கிராமங்களை இணைக்கும் இருநூறு மீற்றர் தூரத்துக்குட்பட்ட பகுதியில் சேவையில் ஈடுபடும் குறித்த இயந்திரப் படகிற்கு பதிலாக புதியதொரு இயந்திரப் படகுச் சேவையினையோ பாலத்தினையோ அமைத்துத் தருமாறு பிரதேச மக்களால் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *