Connect with us

சர்வதேசம்

2024ல் டிரம்ப் மீண்டும் போட்டி

Published

on

வரும், 2024ல் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுவது குறித்து நடுநிலையுடன் முடிவெடுக்கப்படும்’ என, அவரது குடியரசு கட்சியின் தேசியக் குழு தலைவர் ரோனா மெக்டேனியல் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். வரும், 2024ல் நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அவர் கூறி வருகிறார்.
இது குறித்து, குடியரசு கட்சியின் தேசியக் குழு தலைவர் ரோனா மெக்டேனியல் கூறியுள்ளதாவது:

டொனால்டு டிரம்ப், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நடுநிலையுடன் முடிவு செய்யப்படும். அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு நடக்கும், ‘பிரைமரி’ தேர்தல்களின்போது, சரியான முடிவு எடுக்கப்படும்.யார் போட்டியிடலாம், போட்டியிடக் கூடாது என்பது குறித்து நிர்ப்பந்திக்க முடியாது. யார் வேண்டுமானாலும், அதிபர் வேட்பாளருக்கான தேர்வில் போட்டியிடலாம்.சமீபத்தில் நடந்த தேர்தலில், அதிபர் பதவியுடன், செனட் சபையில் பெருன்பான்மையை இழந்துள்ளோம்.

வரும், அடுத்து நடக்க உள்ள தேர்தலில், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் பெரும்பான்மையை பெற வேண்டும். அதற்காக கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும்.டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தின்போது, பிரதிநிதிகள் சபையில், கட்சி எம்.பி.,க்கள் சிலர், அவருக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். நம்மிடையே மோதல் இருக்கக் கூடாது; அது, நமக்கு எதிராக அமைந்துவிடும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.