Connect with us

சினிமா

26 வயது பெண்ணை திருமணம் செய்த 57 வயது நடிகர்

Published

on

பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ‘பேஸ் ஆப், கோஸ்ட் ரைடர், ஹான் இன் 60 செகண்ட்ஸ், ரைசிங் அரிசோனா, தி ராக்’ உள்பட 60-க்கும் மேற்பட்ட படங்களில் நிக்கோலஸ் கேஜ் நடித்து இருக்கிறார். ‘லீவிங் லாஸ் வேகாஸ்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்றார்.

நிக்கோலஸ் கேஜுக்கு 57 வயது ஆகிறது. இவருக்கு 4 தடவை திருமணம் நடந்து விவாகரத்தில் முடிந்தது. முதலாவதாக 1995-ல் நடிகை பாட்ரிசியாவையும், இரண்டாவது 2002-ல் லிசா மேரி பிரெஸ்லியையும், 3-வதாக 2004-ல் ஆலீஸ் கிம்முவையும், 4-வதாக மேக்கப் கலைஞர் எரிகா கோய்கேவையும் திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். எரிகா கோய்கேவை திருமணமான 4-வது நாளிலேயே விவாகரத்து செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது 57 வயதாகும் நிக்கோலஸ் தனது 26 வயது காதலி ரிக்கோ ஷிபாடாவை 5-வது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ரகசியமாக நடந்த இவர்கள் திருமணம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *