Connect with us

இந்தியா

3 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு!

Published

on

பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர் கே.கே.ராகேஷ் எழுப்பிய கேள்விக்கு ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாதநாயக் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

பாதுகாப்பு துறை சார்ந்த பி.இ.எம்.எல். லிமிடெட், கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் லிமிடெட், மிஷ்ரா தாது நிகாம் லிமிடெட் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களில், நிர்வாகம் கைவிட்டு போகாத அளவுக்கு குறைவான பங்குகளை விற்பதையே பின்பற்றி வருகிறோம். பங்கு பரிவர்த்தனை அமைப்பான ‘செபி’ விதிமுறைகளுக்கு உட்பட்டு இப்படி செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *