Connect with us

இலங்கை

351 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Published

on

வடக்கு மாகாணத்தில் ஐனவரி மாதம் தற்போது வரை 351 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதிஸ்வரன் தெரிவித்தார் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் இம்மாதம் 19 ஆம் திகதி வரை 351 பேர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் வவுனியா மாவட்டத்தில் 234 பேரும் மன்னார் மாவட்டத்தில் 70 பேரும் யாழ் மாவட்டத்தில் 32 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 10 பேரும் மூல்லை மாவட்டத்தில் 05 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு  அவதானமும் தேவை  மக்களின் வாழ்க்கை முறையை இலகுபடுத்துவதற்கு  வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக கட்டுப்பாடுகளில் தளர்வு சுகாதார பணிப்பாளர் நாயகத்தால் கொண்டுவரப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும்.

பொது இடங்களில் அவதானமாகவும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் தமது கடமைகளை செய்தல் வேண்டும். குறிப்பாக முக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமுக இடைவெளியை பின்பற்ற வேண்டும் மேலும் கொரோனா பரம்பல் உயர்வாக உள்ள இடங்களில் இருந்து கொரோனா பரம்பல் செறிவு குறைவாகவுள்ள இடங்களுக்கு வருகை தருவோர்  தங்களைத் தாங்களே சுயதனிமைப்படுத்தி கொள்வதன் மூலம் தங்களுடைய குடும்பத்தையும் உறவினர்களையும் சமூகத்தையும் பாதுகாத்துகொள்ள முடியும் என்றார்.