Connect with us

சர்வதேசம்

55 வயதைக் கடந்தவர்கள் கொரோனா தடுப்பூசி போட தடை விதித்த ஸ்பெயின்

Published

on

55 வயதைக் கடந்தவர்கள் அஸ்ட்ரா ஜெனகா கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என ஸ்பெயின் அரசு தடை விதித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பிரிட்டன், அமெரிக்க, பிரேசில் போன்ற நாடுகளில் வைரசின் தாக்கம் கடந்த சில மாதங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் தடுப்பூசி வழங்கும் பணிகளைத் தொடங்கிவிட்டன.

ஸ்பெயின் நாட்டில் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களும் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து கொரோனா உருவாக்கிய கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 55 வயதைக் கடந்தவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை அளிக்க வேண்டாம் என ஸ்பெயின் அரசு உத்தரவிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *