Connect with us

சர்வதேசம்

BBC உலக செய்தி சேவைக்கு சீனா தடை

Published

on

BBC உலக செய்தி சேவைக்கு சீனா தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் உய்கர் இன சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பான BBC-யின் ஊடக ஒளிபரப்பு குறித்து சீனா விமர்சித்துள்ளது.

சீன அரசின் இந்த முடிவானது தமக்கு ஏமாற்றமளிப்பதாக BBC நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த தடை குறித்து சீனாவின் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வானொலி தொடர்பான நிர்வாகம், BBC-இன் சீனா தொடர்புடைய சில தகவல்கள் சீன தேசிய நலன்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற தமது நாட்டு ஒலிபரப்பு வழிகாட்டுதல்களை மீறும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீனாவில் BBC உலக சேவை ஒளிபரப்பை மேலும் ஓராண்டிற்கு மேற்கொள்ள அவகாசம் கேட்டு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என அந்த நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *